வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (18:42 IST)

தமிழகத்தில் இன்று 38 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸால் 50, 100 என மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 31 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக வெளிவந்த செய்தியும் சிறிது நிம்மதியை அளித்தது. இந்த நிலையில் இன்றும் 38 பேர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 38 பெயர்களில் 34 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள 38 பேர்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்று கொரோனா இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 பேர்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்