திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (18:04 IST)

Hydroxychloroquine மருந்தை வாரி வழங்கும் மோடி!!

அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு மருந்து ஏற்றுமதி தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, நட்பு நாடுகளுக்கும் அந்த மருந்தை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 
 
மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரைத்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு.  
 
இந்த மருந்தை இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை இடையில் தடை செய்தது.  ஆனால், ட்ரம்ப் எச்சரிக்கைக்கு பின்னர் ஏற்றுமதி தடையை நீக்கியது.

அதனைத்தொடர்ந்து சில நாடுகளுக்கு மருந்து வேண்டி மோடியிடம் கோரிக்கை வைக்க, தற்போது நட்பு நாடுகளுக்கு பெருமளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.