பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் அதிரடி விலை குறைப்பு - ஹீரோ நிறுவனம் முடிவு...
கடந்த பல வருடங்களாகவே பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டிகளை கொடுத்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இது நிறுத்தப்பட்டது. அதன்பின் தவெக ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் மிதிவண்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் கொடுப்பதற்கு ஹீரோ நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
இந்நிலையில், மாணவர்களுக்கான சைக்கிள் விலையை ரூ.7235 இலிருந்து ரூ.5260 ஆகவும், மாணவிகளுக்கான சைக்கிள் விலை ரூ.7476-ல் இருந்து ரூ.5130 ஆகவும் ஹீரோ நிறுவனம் குறைத்துள்ளது. மேலும் தலைக்கவசம், வாட்டர் பாட்டிலுடன் சைக்கிள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மாணவர்களுக்கான சைக்கிள்களுக்கு ரூ.1975-ம், மாணவிகளுக்கான சைக்கிள்களுக்கு ரூ.2346 ம் குறையும். அரசு தரப்பில் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.