நடமாடும் நகைக்கடை ஹரிநாடாருக்கு என்ன சின்னம் தெரியுமா?
நடமாடும் நகைக்கடை ஹரிநாடாருக்கு என்ன சின்னம் தெரியுமா?
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் சின்னம் ஒதுக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் தற்போது சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது
அந்த வகையில் பல சுயேட்சைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்ட சின்னங்கள் கிடைத்து வருகிறது இந்த நிலையில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரிநாடார் அவர்கள் போட்டியிடுகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் ஹரிநாடாருக்கு தற்போது தலைக்கவசம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தலைக்கவசம் சின்னத்துடன் பைக்கில் உட்கார்ந்தவாறு கிலோ கணக்கில் நகை அணிந்த புகைப்படம் வைரலாகி வருகிறது