1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Hari Nadar filed his nomination from the Alangulam constituency

நடமாடும் நகைக்கடை ஹரிநாடார் வேட்புமனு தாக்கல்: எந்த தொகுதியில் தெரியுமா?

ஹரி நாடார்
நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படுபவர் ஹரிநாடார் என்பதும் அவர் கிலோ கணக்கில் நகை அணிந்து கொண்டு தான் வெளியே வருவார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஹரிநாடார் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். ஆலங்குளம் என்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கிட்டத்தட்ட நாலு கிலோ தங்க நகைகளை அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தன்னிடம் 11200 கிராம் தங்க நகை இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு சுமார் 5 கோடி என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்
 
ஹரிநாடார் அந்த பகுதி மக்களுக்கு அறிமுகம் ஆனவர் என்பது மட்டுமன்றி மிகப் பெரிய அளவில் செலவு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் அவர் வெற்றி பெறுவார் நல்லது வாக்குகளை அதிகமாக பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
கருத்துக் கணிப்புகள் விலை கொடுத்து வாங்கக் கூடியவை: அதிமுக சசிரேகா