செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (10:57 IST)

ரோபோட் சின்னம் கிடைக்கல..? டைம் இல்ல! தேர்தலில் போட்டியிடாத அர்ஜுன மூர்த்தி கட்சி

நடிகர் ரஜினியின் நண்பர் அர்ஜுன மூர்த்தி தொடங்கிய இ.ம.மு.க கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது அவரது அழைப்பை ஏற்று பாஜகவிலிருந்து விலகி ரஜினி கட்சியில் பணியாற்ற வந்தவர் அர்ஜுன மூர்த்தி. பின்னர் ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில், அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியை தொடங்கினார்.

ரஜினிகாந்த் விரும்பிய அரசியல் மாற்றத்தை வழங்குவதே கட்சியின் நோக்கம் என தெரிவித்த அர்ஜூன மூர்த்தி கட்சிக்கு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என பெயரிடப்பட்டதுடன், ரஜினிகாந்தின் பிரபலமான எந்திரன் படத்தை பிரதிபலிக்கும் வகையில் “ரோபோட்” சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அர்ஜுன மூர்த்தி கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி குறைவான கால அவகாசமே இருந்த நிலையில் ரோபோட் சின்னத்தை தொழில்நுட்ப வரிசைப்படுத்துதம், மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட கட்சி உள்பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் இந்த தேர்தலில் போட்டியிட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.