தொடர்புடைய செய்திகள்
- வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. புயலாக மாறுமா?
- சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!
- எக்குத்தப்பாக பெய்யும் மழை! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு..? தமிழகத்தில் இப்பவே மழை சீசனா?
- குடையுடன் வெளியே போங்க.. இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் இடியுடன் மழை..!
- தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் நல்ல மழைப் பொழிவை கண்டு வருகின்றன.
தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
