1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Orange alert for 3 districts.. Places likely to receive rain for the next 3 days!

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அடுத்த 3 நாட்கள் மழை வாய்ப்புள்ள இடங்கள்!

Rain

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், நீலகிரி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

நாளை (ஜூன் 14) நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் அதி கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளது. கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள்,, தென்காசி மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

 

நாளை மறுநாள் (ஜூன் 15) நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு. தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாக்குமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
விமானத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்று தெரியவில்லை!" உயிர் தப்பிய ஒரே நபர் பேட்டி..!