1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain warning to tamil nadu

தமிழ்நாட்டில் 20 செமீ வரை மழை பெய்யும்.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக இன்று கூட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 12 முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
 
குறிப்பாக ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
பாதாளச் சாக்கடையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மரணம்.. அண்ணாமலை கண்டனம்..!