வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (11:44 IST)

10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்து நுரை தள்ளி இறந்த சிறுமி! - திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

Cool drinks

திருவண்ணாமலையில் கடை ஒன்றில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த 5 வயது சிறுமி வாயில் நுரை தள்ளி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ராஜ்குமார். இவரது இரண்டாவது மகளான 5 வயது காவ்யாஸ்ரீ அங்குள்ள தொடக்க பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளாள்.

 

நேற்று காவ்யாஸ்ரீ அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாய், மூக்கு வழியாக நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.

 

உடனடியாக சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையி அனுமதிக்கப்பட்ட காவ்யாஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 

 

கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் சில உள்ளூர் குளிர்பான வகைகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை குறிப்பிடப்படுவதில்லை என்றும், முறையாக சுகாதாரமாக செய்யப்படாதவையாக அந்த குளிர்பானங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் குளிர்பானம் வாங்கினால் அதில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை இருக்கிறதா என்பதை சோதித்தே வாங்க வேண்டும். மேலும் அதில் உணவு பாதுகாப்பு துறையின் FSSAI அடையாளம் உள்ளதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K