1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (11:18 IST)

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா? - தமிழக அரசு அளித்த விளக்கம்!

assembly

அரசு ஊழியர்களின் பணிக்கால வயது வரம்பு 60 ஆக உள்ள நிலையில் அதை 62ஆக உயர்த்த உள்ளதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கான அதிகபட்ச ஓய்வு வயது வரம்பு 60 ஆக உள்ளது. 60 வயதில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமும், தொகுப்பு ஊதியமும் வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில் விரைவில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும் பணி ஓய்வு காலத்தை அதிகரிப்பதால் புதிய ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது குறைவதுடன், வயதான காலத்தில் ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கும் இது சிரமமாக அமையும் என பேசிக் கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் இந்த தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை தகவல் சரிப்பார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசு ஊழியர்களின் பணிக்காலம் வயது 62 ஆக உயர்த்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் வெறும் வதந்தியே. அவ்வாறான எந்த ஆலோசனையும், முடிவும் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளது.

 

Edit by Prasanth.K