வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:50 IST)

இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

Chennai Rain
இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று அதிகாலை சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, ராமநாதபுரம் , ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Siva