திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (08:16 IST)

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! குளிர்ச்சியான தட்பவெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் உள்ள பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது என்பதும் இன்று அதிகாலை கூட சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்  நேற்று இரவு முதல் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகள் ஆன சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தி.நகர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்  விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது

மேலும் வில்லிவாக்கத்தில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று அதிகாலையில் சென்னையின் பல பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva