திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (15:24 IST)

தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த ஐந்து பேர் கைது! - 600 கிலோ குட்கா, கார் பறிமுதல்!

சென்னை போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா சட்ட விரோதமாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.


 
இந்த நிலையில் போரூரில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் குட்கா இருப்பது தெரியவந்தது.

 மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

 மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மகேந்திரன்(36), பப்பு யாதவ்(36), ஏழுமலை(35), மாரியப்பன்(46), ராஜியாதவ்(23), ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.  இவர்களிடமிருந்து 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் குட்காவே மொத்தமாக வாங்கி வந்து குடோனில் பதிக்க வைத்து அங்கிருந்து கார் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.