திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (21:23 IST)

2024 க்கு பிற்கு பாஜகவின் ஆட்சி இருக்காது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு   நடந்து வருகிறது. இந்த மாநாட்டில்  பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024 க்கு பிற்கு பாஜகவின் ஆட்சி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு   நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்காகாந்தி, மெகாமுப்தி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், இன்று திமுக மகளிர் மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த   நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பாஜகவின் ஆட்சி இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும், பெண்ணின் எழுச்சியின் அடையாள மாநாடு இது என்றும், உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்…2024 க்கு பிற்கு பாஜகவின் ஆட்சி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.