1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in 11 districts in the next 3 hours! – Meteorological Centre

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Rain Chances
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஹமாஸை அடக்க நாங்க வறோம்..! – இஸ்ரேலுக்கு கோரிக்கை வைத்த இந்து சாமியார்!