1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (20:32 IST)

பண மோசடி புகாரில் பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

bjp
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் பாஜக மாநில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.40 கோடி மோசடி செய்த காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மா நில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதில், ரூ.1.01 கோடி பணம் மற்ற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.