தொடர்புடைய செய்திகள்
- இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....
- 'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!
- தமிழக கடற்கரையை 25 கி.மீ. வரை டிட்வா புயல் நெருங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் திறப்பு!
- Cyclone Ditwah: டிட்வா புயல் எதிரொலி!.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!...
cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..
டிட்வா புயல் நாகை வேதாரண்யத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கடந்த 30 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு கடும் குளிர் நிலவி வருவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் பல மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டிருக்கிறது
. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. சென்னையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. அதோடு தரைக்காற்றும் வீசி வருவதால் சென்னை விமான நிலையத்தில் நவம்பர் 30ஆம் தேதியான நாளை 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
36 உள்நாட்டு விமானங்களும், 11 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்பதால் நாளை விமான பயணத்தை திட்டமிட்டுள்ள பயணிகள் விமான நிலையங்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
