1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 டிசம்பர் 2025 (12:13 IST)

தற்போதைய ஆட்சியாளர்களும் நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை வரும்: வங்கதேச பிரபலம் எச்சரிக்கை..!

தற்போதைய ஆட்சியாளர்களும் நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை வரும்: வங்கதேச பிரபலம் எச்சரிக்கை..!
வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் முன்னணி தலைவராக இருந்த ஷரீஃப் உஸ்மான் ஹாதியின் மரணம் அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாதியின் கொலையில் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசுக்கு தொடர்பிருப்பதாக அவரது சகோதரர் ஓமர் ஹாதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 
 
திட்டமிட்டபடி பொதுத்தேர்தல் நடைபெறுவதை தடுக்கவும், ஹாதியின் அரசியல் செல்வாக்கை ஒடுக்கவுமே அவர் படுகொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
கடந்த டிசம்பர் 12 அன்று டாக்காவில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஹாதி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மற்றுமொரு மாணவர் தலைவரான மொதாலெப் ஷிக்தெர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 
இந்த சம்பவங்கள் மாணவர் தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் சதி என மக்கள் கருதுகின்றனர். முறையான விசாரணை நடத்தி நீதி வழங்காவிட்டால், தற்போதைய ஆட்சியாளர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரும் என ஓமர் எச்சரித்துள்ளார். 
 
இந்த விவகாரத்தால் வங்கதேசத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
 
Edited by Mahendran