1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (09:06 IST)

சென்னையை வெளுக்கும் கனமழை! – புகார்களுக்கு அவசர உதவி எண்கள்!

Rain
சென்னையில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் மழை தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பிரதான பகுதிகளான அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சாலைகளில் நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிக்கு அவசர எண்கள் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். மேலும் 044-25619204 மற்றும் 044-25619206 என்ற எண்களுக்கும் அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். 94454 77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K