ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:48 IST)

சென்னையில் கனமழை.. திருப்பிவிடப்பட்ட சர்வதேச விமானங்கள்..!

Flight
சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்ததை அடுத்து விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் பல சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்கள் திருச்சி மற்றும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் திடீரென நேற்று இரவு சென்னையில் கன மழை பெய்தது. 
 
இதனால் சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆறு சர்வதேச விமானங்கள் உள்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் பயணிகள்  அவதியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
 சற்று முன்னர் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாததால் திருச்சிக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் ஒரு சில விமானங்கள் திருச்சி மற்றும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன  
 
Edited by Siva