1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (17:56 IST)

சென்னையில் கனமழை: அலுவலகத்தில் இருந்து திரும்பும் பொதுமக்கள் அவதி..!

கடந்த ஒரு மணி நேரமாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து அலுவலகத்தில் இருந்து திரும்பும் பொதுமக்கள் பெரும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வடபழனி, அசோக் பில்லர், கோயம்பேடு, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
 
இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதை அடுத்து வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக அலுவலகத்தில் இருந்து திரும்பும் பொதுமக்கள் பெரும் அவதியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edited by Siva