செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (08:12 IST)

கனமழை எதிரொலி: சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Madras University
சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் அவ்வப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று கூட சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தொடர் கன மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று அதாவது நவம்பர் 30ஆம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வேறு எந்த தேதியில் நடைபெறும் என்பதை குறித்து அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இன்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தேர்வு எழுதுவதற்காக வர வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva