1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (10:05 IST)

சென்னையில் கனமழை: புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

Chennai Corporation
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து  வரும் நிலையில் மழை நீர் தேங்குவது தொடர்பான புகார்களுக்கு சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது

மேலும் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவிக்கும் போது  #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாக் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மழையால் ஏற்பட்ட சேதங்களை  சேதங்களை சரிப்படுத்த மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சற்றுமுன்  புகார் எண்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி 044 2561 9206, 044 2561 9207 மற்றும் 044 2561 9208 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் மேலும் இலவச உதவி எண் 1913 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்க 9445477205 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Edited by Mahendran