தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும்: வெதர்மேன் பிரதீப் ஜான்
- பாடகி பி.சுசீலாவுக்கு கெளரவ முனைவர் பட்டம்!
- சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- ஒரே நாளில் ரூ.200 உயர்ந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.46 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு..!
- காலை 10 மணி வரை மழை பெய்யும்: 11 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
இன்று இரவு 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 20 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 20 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது 20 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
