பாடகி பி.சுசீலாவுக்கு கெளரவ முனைவர் பட்டம்!
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் பாடகி பி.சுசிலா. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிறமொழிகள் என பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
சினிமா பாடல்கள் மட்டுமின்றி, பக்திப் பாடல்கள், தனிப்பாடல்களையும் ஆயிரக்கணக்கில் பாடியுள்ளார்.
இவரது திறமையை பாராடி, கம்பன் புகழ் விருது, பத்ம பூஷன் விருது, தேசிய விருது ஐந்து முறை, தமிழக அரசின் கலைமாமண் விருது என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் பாடகி சுசீலாவின் திறமையை பாராட்டும் வகையில், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்று முனைவர் பட்டத்தை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.