கொரோனாவால் பாதிக்கபட்டவர் குணமடைந்தார் : விஜயபாஸ்கர் டுவீட் !

vijay bashkar
கொரோனாவால் பாதிக்கபட்டவர் குணமடைந்தார் : விஜயபாஸ்கர் டுவீட் 
sinoj| Last Updated: புதன், 25 மார்ச் 2020 (21:46 IST)


இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நாடுமுழுவதும் சுமார் 519 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார்.



அதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக அம்மாநில
சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் 2 வதாக கொரோனா தொற்று உறுதி செட்டப்பட்ட ஒருவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவு செய்துள்ளார்.



இதில் மேலும் படிக்கவும் :