1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 25 மார்ச் 2020 (21:34 IST)

வங்கிக் கடன் தவணையைச் செலுத்துவதில் சலுகைகள் ?

வங்கிகளில் கடன் தவணைகளை செலுத்துவதில் சலுகைகள் ?

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத்தவணையைச் செலுத்த சில சலுகைகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகின்றன.

ஏற்கனவே பொருளாதாரம் திணறிக்கொண்டிருந்த நிலையில்,  சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்கள், தொழிலாளர்கள், ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொழிலாளர்கள், சிறு, பெரு நிறுவனங்களைச் சேர்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்கள் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையில் சில சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகிறது.