வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 25 மார்ச் 2020 (15:51 IST)

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் ! அமைச்சர் விஜயபாஸ்கர் டுவீட்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் !

நேற்று இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடிநள்ளிரவு முதல் 21 நாட்களுக்குமக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த கொரோனா பாதிப்பில்இருந்து மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஊரடங்கு உத்தரவை கடைப்பிக்க வேண்டும்;சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் படுவேகமாகப் பரவி வருகிறது. இதற்கான 8 ஆய்வகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில்,  தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில்,  இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் 4 பேருக்கும், அவர்களின் சுற்றுலா வழிகாட்டியான சென்னை நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.