1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (05:10 IST)

கனிமொழியின் தாயாருக்காக களத்தில் இறங்கி போராடுவேன்: எச்.ராஜா

சமீபத்தில் கனிமொழி நாத்திக மாநாடு ஒன்றில் பேசும்போது திமுகவில் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் அதிகம் உள்ளதாக கூறினார். ஆனால் கனிமொழியின் தாயாரே சமீபத்தில் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் ஆசி வாங்குவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது: 'கனிமொழியின் தாயார் கோவிலுக்குப் போவதை யாரேனும் தடுப்பார்களேயானால், நானே களத்தில் இறங்கி போராடுவேன்" என்று பதிலளித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனிமொழி 'எனது தாயார் கோவிலுக்குச் செல்வதை யாரும் தடுத்தால், அதற்காகவும் போராடுவேன். காரணம், அது எனது தாயாரின் உரிமை. அந்த உரிமையைத் தடுக்கும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை" என்று பேசியிருந்தார். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்குத்தான் எச்.ராஜா மேற்கண்டவாறு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது