செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (01:15 IST)

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை நீக்க ஜனாதிபதி ஒப்புதல்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இரட்டை பதவி விவகாரத்தில் சிக்கியதால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியதை அடுத்து சில நிமிடங்களுக்கு முன் இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளா.ர் இதனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தற்போது டெல்லியில் 20 இடங்கள் காலியாகவுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மியின் பலமும் 66ல் இருந்து 46ஆக குறைந்தது. இருப்பினும் டெல்லியில் ஆட்சியை தொடர ஆம் ஆத்மி கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதல ஆட்சிக்கு ஆபத்து இல்லை. இருப்பினும் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.