வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்திற்கு விஜயகாந்த் ஆதரவு
சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகி இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட் வரை சென்றுள்ள நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி சடகோப ராமானுஜ ஜீயர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஆண்டாளை பற்றி இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சடகோப ராமானுஜ ஜீயருக்கு எனது ஆதரவு உண்டு என்று கூறியுள்ளார்.
ஆண்டாளில் தீவிர பக்தரான விஜயகாந்த், சிவகாசியில் இன்று நடந்த ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.