வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (00:47 IST)

சூர்யாவை பற்றி பேசியவர்கள் வெட்கப்பட வேண்டும். குஷ்பு

சன் மியூசிக் சேனலில் இரண்டு பெண் விஜேக்கள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி அலுவலகத்தின் முன் நின்று போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறியதாவது: ஒருவர் உயரமோ, குள்ளமோ என்பது பிரச்சனை அல்ல, அவர் குண்டாக அல்லது ஒல்லியாகவோ, அழகாகவோ கருப்பாகவோ இருப்பதிலும் பிரச்சனை இல்லை.  யார் உயரம்? யார் குள்ளம் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. எது பெரியது என்பதில் உங்கள் உள்ளத்தில் என்ன சந்தேகம்.

எதை வைத்து அழகு என்று நியாயப்படுத்துகிறீர்கள். சூர்யாவை பற்றி பேசியவர்கள் வெட்கப்பட வேண்டும். இது அர்த்தமற்ற பேச்சு. உங்களது பாலினத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று குஷ்பு கூறியுள்ளார்.

ஏற்கனவே சூர்யாவுக்கு ஆதரவாக விஷால், கருணாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.