1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: திங்கள், 22 டிசம்பர் 2025 (13:48 IST)

உங்க பையன அடக்கிங் வைங்க ஸ்டாலின்!.. ஹெச்.ராஜா பொங்கிட்டாரே!....

உங்க பையன அடக்கிங் வைங்க ஸ்டாலின்!.. ஹெச்.ராஜா பொங்கிட்டாரே!....
கலைஞர் கருணாநிதிக்கு பின் எப்படி முக ஸ்டாலின் அரசியலுக்கு வந்தாரோ அவரைத் தொடர்ந்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசியலுக்கு வந்தார். எனவே, கருணாநிதிக்கு பின் திமுகவை ஸ்டாலின் நடத்துவது போல அவருக்கு பின் அவரின் மகன் உதயநிதி நடத்துவார் என திமுகவினர் நம்புகிறார்கள்.
 
துவக்கத்தில் சினிமா தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் செயல்பட வாங்கினார் உதயநிதி. சினிமாவில் சில படங்களிலும் நடித்தார். அதன்பின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ எம்எல்ஏவாக மாறினார். 2021ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து தீவிர அரசியல்வாதியாகவே செயல்பட்டு வருகிறார் உதயநிதி.
 
அவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பேசும் மேடைகளில் எல்லாம் அதிமுகவையும் பாஜகவையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். உதயநிதி
. திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசும்போது கூட ‘சங்கிகள் எவ்வளவு கூட்டமாக வந்தாலும்.. எத்தனை பேரை துணைக்கு கூட்டி வந்தாலும்.. அவர்கள் நினைப்பது நடக்காது.. இது தமிழ்நாடு.. இது திராவிட நாடு’ என்று பேசியிருந்தார் உதயநிதி.

உங்க பையன அடக்கிங் வைங்க ஸ்டாலின்!.. ஹெச்.ராஜா பொங்கிட்டாரே!....
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ‘நான் முதல்வரிடம் ஸ்டாலினிடம் கேட்கிறேன்.. குடும்பம், கட்சி, ஆட்சி என எதையுமே உங்களால் அடக்கி வைக்க முடியவில்லை. குறைந்தபட்சம் உங்கள் மகனையாவது கொஞ்சம் அடக்கி வையுங்கள்.. உங்கள் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கொள்ளிக்கட்டையே உதயநிதிதான். அவர் பேசியது இந்து விரோத தீய பேச்சு’ என்று பேசியிருக்கிறார்.