1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

சென்னை மெரினாவில் வீடற்றவர்களுக்கான காப்பகம்.. துணை முதல்வர் திறந்து வைக்கிறார்..!

சென்னை மெரினாவில் வீடற்றவர்களுக்கான காப்பகம்.. துணை முதல்வர் திறந்து வைக்கிறார்..!
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில், வீடற்றவர்களுக்கான புதிய இரவு நேர காப்பகத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் உதவியுடன் சுமார் 2,400 சதுர அடி பரப்பளவில் இந்த நவீன காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். இதில் டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை, கழிப்பறை வசதி மற்றும் மின்விசிறி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வீடற்றவர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
ஒரே நேரத்தில் சுமார் 80 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த காப்பகத்தில், தங்குபவர்களுக்கு தேவையான பாய், தலையணை மற்றும் போர்வைகள் வழங்கப்பட உள்ளன. சென்னையில் வீடின்றி நடைபாதைகளில் உறங்கும் மக்களுக்கு இந்த முயற்சி ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
 
Edited by Siva