செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (06:46 IST)

மாற்றுத்திறனாளியுடன் வரும் உதவியாளருக்கும் பேருந்தில் இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தற்போது இது குறித்து அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது 
 
இந்த அரசாணையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி அவர்களுடன் உதவிக்கு வரும் நபர் ஒருவருக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய போது தங்களுடைய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் அதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வரும் உதவியாளர் ஒருவருக்கு நடத்துநர்கள் இலவச பயணத்திற்கான டிக்கெட்டை வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மேலும் மாற்றுத்திறனாளிகள் செய்யும் பயணம் குறித்த விவரங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட்டுகள் குறித்த வழிமுறைகளை போக்குவரத்து கழகங்கள் அமைக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி அவர்களுடன் வரும் உதவியாளரும் பேருந்தில் இலவசம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது