1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (17:40 IST)

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் சம்பளம்: அரசாணை வெளியீடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகினர் தொழிலதிபர்கள் கோடிக் கணக்கில் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்களும் தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை நிதியாக அளிக்க முன்வந்துள்ளனர். அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ள விருப்பத்தை அடுத்து இதற்கான அரசாணை சற்றுமுன் வெளியாகியுள்ளது 
அரசு மற்றும் மானியம் பெறும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது. அரசு ஊழியர்களின் விருப்பத்தின் பெயரில் அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்தப்படுவது குறித்த அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது