திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (15:08 IST)

நகைக்கடன் தள்ளுபடி; விரைவில் அரசாணை! – ஐ.பெரியசாமி தகவல்!

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிவிக்க சில காலங்களே இருந்த இறுதி நிலையில் புதிய அறிவிப்புகள் சில அறிவிக்கப்பட்டன. அதில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் ரத்து செய்யும் ஆணையும் ஒன்று. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை வைத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.

தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் அந்த ஆணை பரிசீலிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி “கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.