வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (10:04 IST)

கவர்னர் 7 பேரை விடுதலை செய்ய மட்டார் - அடித்துச் சொல்லும் சுப்ரமணியன் சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக  அமைச்சரவையின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, தமிழக அரசு  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் ஆனால் இதில் முடிவெடுக்க அவருக்கு மட்டுமே உரிமை உண்டு.
 
கண்டிப்பாக ஆளுனர் ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுவிக்க மாட்டார் என அவர் தெரிவித்தார்.