செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (18:10 IST)

நீர்த்தேக்கங்களாக மாறும் கல்குவாரிகள்: தமிழக அரசு புதுத்திட்டம்!

தமிழகம் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. பெரும்பாலும், தமிழகம் தண்ணீருக்காக மற்ற மாநிலங்கள் மற்றும் பருவ மழையை எதிர்நோக்கி இருக்கிறது. 
 
எனவே நீர் அதிக அளவு கிடைக்கும் நேரத்தில் அதை சேமித்து வைத்து வறட்சியின் போது பயன்படுத்திக்கொள்ள பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில், தமிழகத்தில் வறட்சிக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கைவிடப்பட்ட 1,188 கல் குவாரிகளை நீர்த்தேக்கங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 
15 முதல் 40 மீட்டர் வரை ஆழமுள்ள இந்த கைவிடப்பட்ட கல்குவாரிகள் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1,188 குவாரிகளில் 112 அரசாலும், 1,076 தனியாராலும் நிர் வகிக்கப்பட்டவையாகும். 
 
நீர்த்தேக்கங்கள், அணைகள் மற்றும் குளங்களில் இருந்து இந்த குவாரிகளுக்கு நீர் கொண்டுவர புதிய கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கவும், நீரை சேமிக்கவும் முடியும் என்று தமிழக அரசு நம்புகிறது.