தொடர்புடைய செய்திகள்
- அம்மாவுக்கு ‘ஐ லவ் யூ மம்மி’.. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மகள்..!
- குடியரசு தின விழாவிற்காக வேலை வாங்கிய பள்ளி நிர்வாகம்.. 8ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி..!
- நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற 7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!
- ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்
- 3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!
இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்.. ஒரே மேடையில் மணம் முடித்தனர்..! உறவினர்கள் குழப்பம்..!
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நடந்த அபூர்வ திருமணம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் மற்றும் வினய் என்ற இரட்டை சகோதரர்கள், கீர்த்தனா மற்றும் கீர்த்தி என்ற இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் மணம் முடித்தனர்.
ஒரே மாதிரியான உருவ அமைப்பு கொண்ட மணமக்களும், அவர்கள் அணிந்திருந்த மணக்கோலமும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களைச் சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.
யார் மணமகன், யார் மணமகள் என்று அடையாளம் காண்பதில் விருந்தினர்கள் திணறினாலும், இந்த அபூர்வ நிகழ்வு ஒரு அழகான குழப்பத்தை உருவாக்கியது.
இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரட்டையர்கள் இவ்வாறு இணைவது மிகவும் அரிதானது என கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Edied by Siva
