1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:44 IST)

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி: தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேச்சு..!

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என பாஜகவின் கேபி ராமலிங்கம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என பாஜக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் கூறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் சேலம் அருகே ஓமலூர் என்ற பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
 இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.  
 
அவரது பேச்சுக்கு திமுகவினர் என்ன பதிலடி கொடுக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva