ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:20 IST)

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாணயம் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார். 
 
சென்னை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva