திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:24 IST)

தமிழகத்தில் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் வெப்பம் கூடுதலாக பதிவாகும் என்றும் குறிப்பாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்கள் ஆக இரவில் மழை பெய்து வந்ததால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை ஏற்பட்டது என்பதும் இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
 
 ஆனால் தமிழகத்தில் இனிவரும் நாட்களில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. 
 
அதே நேரத்தில் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran