1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:04 IST)

தமிழ்நாடு ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து: நாளை சிறப்புக்கூட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று டெல்லி பயணம் செய்ய இருந்த நிலையில் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் அந்த மசோதாவை மீண்டும் இயற்றுவதற்காக நாளை சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட உள்ளது 
 
இந்த தொடரில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து கவர்னருக்கு அனுப்ப அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல இருந்த நிலையில் அந்த பயணத்தை அவர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.