புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:10 IST)

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியது தமிழ் மக்களுக்கு எதிரானது: பா ரஞ்சித்

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியது தமிழக மக்களுக்கு எதிரானது என பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா ஏற்றப்பட்ட நிலையில் அந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை சமீபத்தில் கவர்னர் திருப்பி அனுப்பினார்
 
இது குறித்து ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கூறியபோது நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியது தமிழ் மக்கள் விரும்பிய உணர்வை திருப்பி அனுப்புவது என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்றும் ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்
 
அவரது இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது