1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold price increases after a week in Chennai

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!

Tamilnadu
தீபாவளிக்கு பிறகு குறைய துவங்கி வந்த தங்கத்தின் விலை இன்று ஏற்றத்தை கண்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.  
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ. 36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ. 4,532-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash