வலுவடைந்தது புயல் சின்னம்! இலங்கை நோக்கி நகரும்! – வானிலை ஆய்வு மையம்!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்க கடலின் தென் கிழக்கில் இலங்கைக்கு அப்பால் உருவாகிய இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றே புயலாக வலு பெறும் என்றும், இலங்கை நோக்கி நகர தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.