வண்ணாரப்பேட்டை to திருவொற்றியூர் – இரண்டு வாரங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

Last Updated: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:24 IST)

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான பாதையில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களுக்கு ரயில் சேவையும் தொடங்கப்பட்டு விட்டது. இதையடுத்து இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான
9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணத்தை தொடங்கும் வகையில் இரண்டு வாரங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :