தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீதம் மழை குறைவு – அமைச்சர் அறிவிப்பு!

Last Updated: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:24 IST)

தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பை விட 14 சதவீதம் மழைக் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வழிய இடம் இல்லாமல் குளம்போல தேங்கிக் கிடந்தது. அதையடுத்து மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று சென்னையில் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ‘
தமிழகத்துக்கு 29.11.2020 வரை இயல்பான மழை 352.6 மி.மீட்டர் ஆக இருக்க வேண்டும். ஆனால் 301.8 மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவாகும். ’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :